உலகம்
சீன அரச ஊடகவியலாளருக்கு 7 வருட சிறை!

சீன அரச ஊடகவியலாளருக்கு 7 வருட சிறை!
சீன அரச ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 வருடகால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
உளவு பார்த்த குற்றச்சாட்டிற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 62 வயதான டொங் யுயு கடந்த 2022ம் ஆண்டு கைதுசெய்யப்பட்டார்.
அமெரிக்க மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஊடகத்துறைசார்ந்த பணிகளிலும் கற்றல் செயற்பாடுகளிலும் டொங் யுயு ஈடுபட்டு வந்தார். அவர் கைதுசெய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் ஜப்பான் அரச பிரதிநிதி ஒருவருடன் மதிய உணவில் இணைந்திருந்தார்.
நாட்டின் இரகசியங்களை தமது எதிரி நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. டொங் யுயு கைதுசெய்யப்பட்ட காலத்தில் அவர் சீன கம்யூனிச கட்சியுடன் தொடர்புகளை பேணி வந்த பிரதான செய்தி பத்திரிகை நிறுவனத்தின் ஊழியராகவும் செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.