இலங்கை
சீரற்ற காலநிலையால் 377,500 பேர் பாதிப்பு!

சீரற்ற காலநிலையால் 377,500 பேர் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, ஒரு லட்சத்து 13 ஆயிரதத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கருத்துக்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களை விட, எட்டுப் பேர் வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இடரால் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்த நிலையில் 4 பேர் காணாமல் போயுள்ளனர். 91 வீடுகள் முழுமையாகவும், ஆயிரத்து 662 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட வியாபார நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்து 431 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 695 பேர் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் வடக்கு மாகாணத்தில் 37 ஆயிரத்து 385 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (ப)