Connect with us

உலகம்

டிரம்ப் வெற்றியால் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு உயர்வு!

Published

on

Loading

டிரம்ப் வெற்றியால் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு உயர்வு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பின் வெற்றியின் மூலம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் நிகர சொத்துமதிப்பு ஒரே நாளில் 26.5 பில்லியன் டொலர்கள் உயர்ந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க், இந்தத் தேர்தலில் டிரம்பின் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். அவருடைய பிரச்சாரத்திற்கு சுமார் 119 பில்லியன் டொலர்களை நன்கொடை அளித்திருந்தார்.

Advertisement

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அவரது நிகர மதிப்பு 26.5 பில்லியன் டொலர்கள் அதிகரித்து 290 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரது நிறுவனங்களின் பங்குகள் கூடியுள்ளன.

டெஸ்லாவின் ஒரு பங்கு 14.75% (37.09 டொலர்கள்) அதிகரித்து 288.53 டொலரை எட்டியுள்ளது. நவம்பர் 4 ஆம் திகதி அன்று 242.84 டொலராக இருந்த பங்குகள், நவம்பர் 6 ஆம் திகதி 288.53 டொலராக உயர்ந்துள்ளது.

டிரம்பின் வெற்றியால் எலான் மஸ்க் மட்டுமின்றி உலகின் இரண்டாவது பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு 7.14 பில்லியன் டொலர்கள் அதிகரித்து 228 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது.

Advertisement

அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் வெற்றிபெற்ற பிறகு அமெரிக்க பங்குச் சந்தை பொதுவாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன