Connect with us

சினிமா

நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்!

Published

on

Loading

நடிகை சமந்தாவின் தந்தை காலமானார்!

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக் குறைவால் காலமானார்.

சமந்தா தனது தந்தை காலமானதை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.

Advertisement

சமந்தா தந்தையின் மறைவு அவரது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சமந்தாவிற்கு அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இரங்கல் மற்றும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாகக் காதலித்து, கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதனிடையே, உடலின் நோய் எதிா்ப்பாற்றலே தசை செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு அதைச் சிதைக்கும் மையோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்ட வந்த சமந்தா, தற்போது உடலநலம் தேறி படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த நிலையில், சமந்தாவின் தந்தை மறைவு அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு சென்னை பல்லாவரத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன