இந்தியா
பெண்ணை மயக்கி ஆபாச வீடியோ – விமான நிலையத்தில் அலேக்காக தூக்கிய போலீஸ்!

பெண்ணை மயக்கி ஆபாச வீடியோ – விமான நிலையத்தில் அலேக்காக தூக்கிய போலீஸ்!
இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினேஷும், அந்த இளம்பெண்ணும் தனிமையில் சந்திக்க முடிவு செய்தனர். இதையடுத்து, தினேஷ் தனது காரில் அந்த பெண்ணை வேலூருக்கு அழைத்துச் சென்றார். அப்போது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்த தினேஷ், அந்த இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததை அறிந்த இளம்பெண், தினேஷ் உடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், தன்னுடன் மீண்டும் பேசாவிட்டால் தான் எடுத்த ஆபாச வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், சொந்த ஊரான திருச்சி திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தினேஷ் மீது புகார் அளித்தார். இதன் பேரில் 5 பிரிவுகளின் கீழ் தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த தகவலை அறிந்த தினேஷ், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். இதையடுத்து, திருச்சி மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில், வெளிநாடு தப்பிச் சென்ற தினேஷ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி மலேசியாவில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு தினேஷ் வந்ததை அறிந்த குடியேற்றப்பிரிவு அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தினேஷ் குறித்து திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கொச்சி சென்ற தனிப்படை காவல்துறையினர் தினேஷை கைது செய்து திருச்சிக்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினேஷை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.