Connect with us

உலகம்

மலேரியா அற்ற நாடாக எகிப்து

Published

on

Loading

மலேரியா அற்ற நாடாக எகிப்து

உலக சுகாதார ஸ்தாபனம் மலேரியா அற்ற தேசமாக எகிப்தை அங்கீகரித்து அத்தாட்சிப்படுத்தியுள்ளது. எகிப்து பழமையான நாகரிகத்தை கொண்டுள்ள நாடான போதிலும், மலேரியா நோய்க்கும் அங்கு நீண்ட வரலாறு உள்ளது. என்றாலும் இனி எகிப்தில் மலேரியா ஒரு கடந்த கால வரலாறாக மாத்திரமே இருக்கும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

‘மலேரியா இல்லாத தேசமாக எகிப்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அத்தாட்சிப்படுத்தலானது அந்நாட்டு மக்களும் அரசாங்கமும் மலேரியா ஒழிப்புக்காக முன்னெடுத்துவரும் அர்ப்பணிப்புக்கு கிடைக்கப் பெற்றுள்ள பிரதிபலனாகும்’ என்று உலக சுகாதார ஸ்தாபனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளார். எகிப்துடன் சேர்த்து உலகளவில் 44 நாடுகள் மலேரியா இல்லாத நாடுகளாக அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனோபிளஸ் நுளம்புகளால் பரப்பப்படும் இந்த மலேரியா நோய் தொடர்பில் கடந்த மூன்றாண்டு காலம் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அத்தாட்சிப்படுத்தல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருட காலப்பகுதியிலும் மலேரிய பரவுதல் பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஆனால் உலகில் ஆண்டுக்கு சுமார் 6 இலட்சம் பேர் மலேரியா நோயால் உயிரிழக்கின்றனர். அவர்களில் 95 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களாவர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன