இந்தியா
ராஜநாகம் Vs இந்திய நாகம்.. இரண்டில் ஆபத்தானது எது தெரியுமா..?

ராஜநாகம் Vs இந்திய நாகம்.. இரண்டில் ஆபத்தானது எது தெரியுமா..?
இரண்டு பாம்புகளும் நாகப்பாம்பு குடும்பத்தைச் சேர்ந்தவை. ஆனால், அவற்றின் ஆக்கிரமிப்பு மற்றும் விஷத்தன்மையில் இரண்டு வேறுபடுகின்றன. ராஜநாகம் உலகின் மிகப்பெரிய விஷப் பாம்புகளில் ஒன்றாகும். இது இரையின் உடலில் அதிகளவு விஷத்தை செலுத்தும் திறன் கொண்டது. ஆனால், இதன் ஆக்கிரமிப்பு மிகவும் குறைவானது. ஆனால், இந்திய நாகப்பாம்பின் செயல் நேர்மாறாக, அதிக ஆற்றல் கொண்ட விஷத்தை கொண்டவை.
ராஜநாகம் வீரியமான விஷத்தை கொண்டது என்று அறியப்பட்டாலும், அது இந்திய நாகப்பாம்பு அளவுக்கு கொடியது அல்ல. ராஜநாகம் ஒரே கடியில் 1,000 மில்லி கிராம் அளவுக்கு விஷத்தை பாய்ச்சும். ஆனால், அதன் நோக்கம் மனிதர்களை கொள்வது அல்ல. பெரிய இரைகளை வீழ்த்துவதுதான். இதனால், ராஜநாகம் கடித்த மனிதர்களில் சுமார் 50 சதவீதம் பேர் முறையான சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளனர்.
அதேநேரத்தில் இந்திய நாகப்பாம்பு ஒரு கடிக்கு வெறும் 170 – 250 மில்லி கிராம் அளவுக்கே விஷத்தை செலுத்துகிறது. ஆனால், இந்த விஷம் சுமார் 10 பேரை கொல்லும் அளவுக்கு வீரியமானது. இதன் காரணமாக, உலக அளவில் பாம்புகள் கடித்து உயிரிழப்பவர்களில் நான்கில் ஒரு பங்கு பேரின் மரணத்திற்கு இந்திய நாகப்பாம்பு காரணமாக இருக்கிறது. இந்திய நாகப்பாம்பால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 ஆயிரம் பேர் மரணமடைகின்றனர்.
ஏனெனில், இந்திய நாகப்பாம்பு, ராஜநாகத்தை விட மிகவும் வலிமையான விஷத்தை கொண்டுள்ளது. ஆனால் அளவில் சிறியதாக இருக்கிறது. முழுமையாக வளர்ந்த இந்திய நாகப்பாம்பு அதிகபட்சம் 7 அடி நீளமும், 6 பவுண்டுகள் எடை மட்டுமே இருக்கும். ஆனால், முழுமையாக வளர்ந்த ஒரு ராஜநாகம் அதிகபட்சம் 19 அடி வரை இருக்கும். 15 பவுண்ட்கள் எடையுடன் இருக்கும். இது உலகின் மிகப்பெரிய விஷப்பாம்பு ஆகும். இது பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்தில் காணப்படுகிறது.