Connect with us

உலகம்

வங்கதேசத்தில் ஹிந்து மத தலைவர் கைது: ஷேக் ஹசீனா கண்டனம்!

Published

on

Loading

வங்கதேசத்தில் ஹிந்து மத தலைவர் கைது: ஷேக் ஹசீனா கண்டனம்!

இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டமைக்குக்கு பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஷில் உள்ள ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற இந்து அமைப்பின் தலைவர் சின்மாய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. இவர்,’இஸ்கான்’ எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில், கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்து அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தின் போது, பங்களாதேஷ் தேசிய கொடியை அவமதித்ததாக கிருஷ்ண தாசை அந்நாட்டு போலிஸார் கைது செய்தனர்.

தேச துரோகம் உட்பட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பிணை மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இவரது கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

Advertisement

இந்து மதத்தை சேர்ந்த தலைவரை பொலிஸார் தவறாக கைது செய்துள்ளனர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.

இதேவேளை, நாட்டில் இந்து சமூகத்தின் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்கானைத் தடை செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளை தடை செய்வதற்கும் பங்களாதேஷ் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இஸ்கான் நிறுவனத்திற்கு தடை கோரிய மனு மீதான விசாரணையின் போது, ​​அரசு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அந்நாட்டு சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

சின்மோய் கிருஷ்ணதாசை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவரை விடுதலை செய்யக் கோரி நீதிமன்றம் முன்பாக ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன