சினிமா
வடிவேலுவ ஒரு மனுஷனாவே பார்க்க மாட்டேன்..! பிரபுதேவா போட்டு உடைத்த உண்மை

வடிவேலுவ ஒரு மனுஷனாவே பார்க்க மாட்டேன்..! பிரபுதேவா போட்டு உடைத்த உண்மை
ஹாலிவுட்டில் பிரபல நடிகராக மட்டுமில்லாமல் டான்ஸ் மாஸ்டராகவும் இயக்குனராகவும் காணப்படுபவர் தான் பிரபுதேவா. மைக்கல் ஜாக்சனின் தீவிர பேனான இவர் அவரைப் போலவே பல தடவை நடனமாடி தனது ரசிகர்களை அசர வைத்திருப்பார்.இந்த நிலையில், நடிகர் பிரபுதேவா வடிவேலு பற்றி தெரிவித்த கருத்து ஒன்று இணையத்தள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், எனக்கு டோம் அண்ட் ஜெரி ரொம்ப பிடிக்கும். d_i_aவடிவேலுவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு டோம் அண்ட் ஜெரி கார்ட்டூன் தான் ஞாபகம் வரும். அவர மனுஷனாவே பார்க்க மாட்டேன். அது ஒரு கார்ட்டூன் கேரக்டர் அந்த மாதிரி தான் என் மனசுக்கு தோணும். அவரே நிறைய இடத்தில் யோவ் இவன் என்ன பற்றி என்னென்னமோ பண்றான் இவன்னு சொல்லுவார்.இவ்வாறு பிரபுதேவா வடிவேலு பற்றி தனது மனதில் இருந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார். பிரபுதேவாவும் வடிவேலும் பல படங்களில் ஜோடி போட்டு காமெடி பண்ணி இருப்பார்கள். அவர்களுடைய காமெடி இன்றளவில் மட்டும் ரசிக்கக் கூடிய வகையிலும் மனம் விட்டு சிரிக்க கூடிய வகையிலும் காணப்படும்.தற்போது இவர்களுடைய காம்போ மீண்டும் வராதா என பல ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து உள்ளார்கள். எனினும் பிரபுதேவா பல படங்களில் பிஸியாக நடித்து வருவதோடு வடிவேலும் ஒரு சில படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.