இந்தியா
Chennai Rains: ஃபெஞ்சல் புயலால் தேங்கிய மழைநீர் – சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடல்!

Chennai Rains: ஃபெஞ்சல் புயலால் தேங்கிய மழைநீர் – சென்னையில் 6 சுரங்கப்பாதைகள் மூடல்!
ஃபெஞ்சல் புயல் சென்னையில் இருந்து 90 கி.மீ. தொலைவில் நகர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இன்று மாலை புயல் கரையை கடக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் கரை கடக்க உள்ள நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இன்று காலை முதலே கனமழை பெய்துவந்த நிலையில், நகரின் பல இடங்களில் சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கியது.
இதற்கிடையே, சென்னையில் தொடரும் கனமழையால் எழும்பூரில் உள்ள கெங்கு ரெட்டி சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது.
அதேபோல், ரங்கராஜபுரம் சுரங்கப் பாதையும் மழைநீர் தேக்கத்தால் மூடப்பட்டுள்ளது.
துரைசாமி சுரங்கப் பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதையும் மழைநீர் தேங்கியதால் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக, மாணிக்கம் நகர், ஸ்டான்லி நகர், வில்லிவாக்கம் ஆகிய சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது.
இதேபோல், ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பட்டினப்பாக்கம் – நொச்சிக்குப்பம் சாலை தடுப்புகளை வைத்து மூடப்பட்டுள்ளது.