இந்தியா
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஏற்காடு, சேரன் ரயில்கள் சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை – கொல்லம் சிறப்பு ரயில் (நள்ளிரவு 12.30)
சென்னை – ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (இரவு 11.55)
சென்னை – திருவனந்தபுரம் ரயில் (இரவு 8)
சென்னை – பெங்களூரு மெயில் (இரவு 11.30)
சென்னை – கோவை அதிவிரைவு ரயில் (இரவு 11)
சென்னை – கோவை சேரன் எக்ஸ்பிரஸ் (இரவு 10.30)
சென்னை – மங்களூரு ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படும்
சென்னை – லோக்மான்ய திலக் திருவள்ளூரில் இருந்து புறப்படும்
சென்ட்ரல் – கோவை இன்டர்சிட்டி ஆவடியில் இருந்து புறப்படும்
இதற்கிடையே, ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று செங்கல்பட்டில் இருந்து வண்டலூர் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்றும் தாம்பரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்றும் தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், பிற்பகல் 12.15 மணி முதல் பறக்கும் ரயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போன்று இயங்குகின்றன. மெட்ரோவை பொறுத்தவரை கோயம்பேடு, பரங்கிமலை மற்றும் அரும்பாக்கத்தில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.