Connect with us

சினிமா

Jason Sanjay: விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதை இதுதான்… தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்!

Published

on

Jason Sanjay: விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதை இதுதான்... தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்!

Loading

Jason Sanjay: விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தின் கதை இதுதான்… தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்!

Advertisement

லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம் ஊடகங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் மோஷன் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. முன்னதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜிகேஎம் தமிழ் குமரன் கூறும்போது, “நல்ல கதைகளை எங்களின் தயாரிப்பு நிறுவனம் எப்போதும் ஊக்குவித்து வருகிறது.

அந்த வகையில், ஜேசன் சஞ்சய் கதை சொன்னபோது சுவாரஸ்யமாகவும் புதிதாகவும் இருந்தது. குறிப்பாக, அந்தக் கதையில் பான் இந்தியா படத்திற்கான களம் இருப்பதை உணர்ந்தோம். ‘நீங்கள் இழந்ததை அதே இடத்தில் தேடுங்கள்’ என்ற மையக்கருவை சுற்றிதான் படம் நகரும். தனது திறமையான நடிப்பால் சந்தீப் கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்புகிறோம்” என்றார்.

இதையும் படிங்க:

Advertisement

படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி கேட்டபோது, “படத்திற்கு தமன் இசையமைக்கிறார். படத்தில் மற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினரும் பணிபுரிய அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவோம். ஜனவரி 2025-ல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் அவர் இடத்தை நிரப்ப பலர் போட்டி போட்டுக்கொண்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க இனி விஜய் நடிக்கவே மாட்டார் என்பது அவரது ரசிகர்களை சோகத்தில் தள்ளியது. இந்த நிலையில் தான், விஜய் ரசிகர்களுக்கு ஆதரவாகவும் ஆறுதலாகவும் ஒரு நடிகனாக அல்ல, ஒரு இயக்குனராக களமிறங்கி உள்ளார் அவரது மகன் ஜேசன் சஞ்சய்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன