விளையாட்டு
அடுத்த வருட IPL தொடரில் களமிறங்கும் 13 வயது இளம் வீரர்

அடுத்த வருட IPL தொடரில் களமிறங்கும் 13 வயது இளம் வீரர்
2025 IPL தொடருக்கான மெகா வீரர்கள் ஏலமானது சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் உள்ள அபாடி அல்-ஜோஹர் அரங்கில் நடைபெற்றது.
முதல் நாள் ஏலத்தில் இந்திய வீரர்களான ரிஷப் பண்ட் 27 கோடி, ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி மற்றும் வெங்கடேஷ் ஐயர் 23.75 கோடிக்கு சென்றனர்.
அந்தவகையில் இரண்டாம் நாள் நடந்த ஏலத்தில் 13 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 1.10 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
IPL வரலாற்றில் குறைந்த வயதில் ஏலத்திற்கு வந்த வீரராக, 13 வயது வைபவ் சூர்யவன்ஷி பதிவுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு 13 வயது இந்திய பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் வாசிக்கப்பட்டது.
இளம் வயது வீரரான அவரை விலைக்கு வாங்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் போட்டி போட்டன.