Connect with us

சினிமா

ஒருநாள் முன்பாக வெளியாகும் புஷ்பா – 2!

Published

on

Loading

ஒருநாள் முன்பாக வெளியாகும் புஷ்பா – 2!

புஷ்பா – 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா – 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் திகதி உலகளவில் வெளியாகிறது. அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

Advertisement

படத்தின் டிரைலர் வெளியாகி இந்தியளவில் பெரிய வரவேற்பைப் பெற்றதால் இப்படம் மிகப்பெரிய வணிக வெற்றியை அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது வெளியீட்டுத் திகதியில் தயாரிப்பு நிறுவனம் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

அதன்படி, டிச. 4 ஆம் திகதி இரவு 9.30 மணியிலிருந்தே தெலங்கானாவில் புஷ்பா – 2 திரையிடப்படுகிறதாம். டிக்கெட் விலையாக ரூ. 1,120 – 1,240 வரை உயர்த்தியுள்ளனர்.

Advertisement

அதேநாளில் தமிழகத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புஷ்பா – 2 திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன