சினிமா
ஒரு வழியா ஹார்ட் டிஸ்க் கிடைச்சுருச்சுப்பா.. லால் சலாம் OTT ரிலிஸ், ஆனால் ஒரு டுவிஸ்ட்

ஒரு வழியா ஹார்ட் டிஸ்க் கிடைச்சுருச்சுப்பா.. லால் சலாம் OTT ரிலிஸ், ஆனால் ஒரு டுவிஸ்ட்
லால் சலாம் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்த படம்.இப்படம் ரசிகர்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்றது. அதோடு லால் சலாம் படத்தின் நிறைய புட்டேஜ் தொலைந்து விட்டது, அதனால் தான் படம் சரியில்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறினார்.இதனால் மிகப்பெரும் ட்ரோல் கண்டெண்ட் ஆக இது மாறியது, தற்போது ஒரு வழியாக லால் சலாம் படம் OTT-யில் ரிலிஸாக போவதாக தகவல் கிடைத்துள்ளது.ஆனால், அதில் ஒரு டுவிஸ்ட் என்னவென்றால் லால் சலாம் ஹிந்தி பதிப்பு மட்டுமே ரிலிஸ் ஆகவுள்ளதாம், உடனே ரசிகர்கள் என்னப்பா ஹார்ட் டிஸ்க் கிடைச்சுருச்சு போல என கலாய்த்து வருகின்றனர்.