Connect with us

சினிமா

கடந்த 4 வருடத்தில் சமந்தா சந்தித்த சோதனைகள்.. Stay Strong Sam

Published

on

Loading

கடந்த 4 வருடத்தில் சமந்தா சந்தித்த சோதனைகள்.. Stay Strong Sam

நடிகை சமந்தா உச்ச நட்சத்திரமாக வளம் வரும் நேரத்தில் திடீரென திருமணத்தை முடித்தார். நாகசைதன்யாவை காதலித்து கரம் பிடித்த சமந்தாவுக்கு அதன் பின் சோதனை காலமாக தான் அமைந்தது. ஆரம்பத்தில் இவர்கள் காதல் கதையும் நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால் திடீரென இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட ஆரம்பித்தது.. இவர்கள் விவாகரத்து சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

கடந்த 4 வருடத்தில் சமந்தா சந்தித்த முதல் சோதனை, விவாகரத்து தான். அதிலிருந்து மீண்டு வர மிகவும் கஷ்டப்பட்டார். சரி இனி, நமது கேரியரில் கவனம் செலுத்துவோம் என்று கேரியரை கவனிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் அவருக்கு மையோசிட்டிஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் நிறைய சவால்களையும் வலிகளையும் எதிர்கொண்டார். இது சமந்தாவுக்கு வந்த இரண்டாவது சோதனை.

Advertisement

இதனால் சினிமாவில் இருந்து சின்ன பிரேக் எடுத்தார். அந்த நேரத்தில் விளம்பரங்கள் மற்றும் போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றையும் நடத்தினார். அந்த போட்காஸ்ட் நிகழ்ச்சியில் சமந்தா மருத்துவம் சம்மந்தமாக நிறைய தகவல்களை மருத்துவர்களிடம் கேட்டு நம்முடன் பகிர்ந்தார். இதற்க்கு நடுவில் பல மருத்துவர்கள் சமந்தாவை விமர்சித்தனர்.

ஆனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க துவங்கினார். அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அப்படி மீண்டும் எழுந்து நிற்கும் நேரத்தில் நாகசைதன்யா சோபிதா திருமண செய்தி வெளிவந்தது. இதற்க்கு சமந்தா எந்த கமெண்டும் இதுவரை செய்யவில்லை என்றாலும், அவருக்கு அதில் வருத்தமுள்ளதை சில நேர்காணலில் மறைமுகமாக கூறியிருந்தார்.

நிஜ வாழ்க்கையில் நான் ஸ்பையாக இருந்திருக்கலாம் என்று கூறியது, நாகசைதன்யா சோபிதா உறவு முன்பே சமந்தாவுக்கு தெரியுமா? அதனால் தான் விவாகரத்து பெற்றாரா என்ற கேள்வியை உருவாக்கியது. இதையும் பொருட்படுத்தாமல் சமந்தா தொடர்ந்து தனது வேலையை பார்த்து வந்தபோது தான், அவர் தந்தை இறந்துவிட்டார். அதில் மிகவும் உடைந்து போயிருக்கிறார் சமந்தா.

Advertisement

கடந்த 4 வருடத்தில் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வரும் சமந்தா அதை எதையும் வெளிப்படுத்தாமல் சிரித்த முகத்துடன் வளம் வருகிறார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன