இலங்கை
கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கைதான நீர்கொழும்பு பிராந்தியத்தின் மோசடி விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்றைய தினம் நீர்கொழும்பு பதில் நீதவான் கே.ஜி.குணதாச முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
அதன்போது, அவர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வாடகை மகிழுந்து தொடர்பான தகராறு ஒன்றைத் தீர்த்து வைப்பதற்காக 270,000 ரூபாய் பெறுமதியான குளிரூட்டியைக் கையூட்டலாகக் கோரி, அதற்கான பணத்தை வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரின் கணக்கில் வரவு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது, சந்தேகநபரான காவல்துறை அதிகாரி கைதானார்.