இலங்கை
கொழும்பில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!

கொழும்பில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு!
கடுவல – கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் தலங்கம வடக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண்ணொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றையதினம் (30-11-2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தலங்கம வடக்கைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடுவல பகுதியில் இருந்து பத்தரமுல்ல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியைக் கடந்து சென்ற பெண் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த பெண் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் விபத்தில் காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.