Connect with us

சினிமா

சுந்தரி சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியில் நடக்கும் அதிரடி திருப்பங்கள்?

Published

on

Loading

சுந்தரி சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியில் நடக்கும் அதிரடி திருப்பங்கள்?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகின்றது. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு அடிமையானவர்களாகவே இல்லத்தரசிகள் பலர் காணப்படுகின்றார்கள்.தமிழ்நாடு டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் ஐந்து இடங்களை சன் டிவி சீரியல்கள் தவறாமல் பிடித்து வருகின்றன. அந்த அளவுக்கு இந்த சேனலுக்கு அதிகளவானோர் முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களுள் ஒன்றுதான் சுந்தரி. இந்த சீரியலின் முதலாவது பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகமும் வெளியானது. தற்போது கிளைமேக்ஸ் காட்சியை எட்டி உள்ளது சுந்தரி சீரியல்.இந்த நிலையில், சுந்தரி சீரியலின் பரபரப்பான கிளைமேக்ஸ் காட்சியில் இறுதியில் கார்த்தி தனது மகளை கொண்டு வந்து சுந்தரி தான் உண்மையான அம்மாவா என்று சத்தியம் செய்யுமாறு சுந்தரியின் கல்யாணத்தை குழப்பம் ஏற்படுத்துகிறார். மேலும் அனு இப்போதே இங்கே வரவேண்டும் என்று காட்டப்பட்ட ப்ரோமோ பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.இவ்வாறான நிலையில் தற்போது சுந்தரி சீரியல் 1144 எபிசோட் களுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இதன் இறுதியில் அணு மீண்டும் கார்த்தி கூட இணைவதோடு சுந்தரிக்கு நடக்கும் கல்யாணத்தை முன்னுக்கு நின்று நடத்தி வைக்கின்றார். அவர்கள் இருவரின் ஆசிர்வாதத்துடன் தற்போது சுந்தரிக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இவ்வாறு சுந்தரி சீரியல் நிறைவுக்கு வந்துள்ளது. மேலும் சுந்தரி சீரியலின் நாயகி தற்போது கர்ப்பமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன