சினிமா
தனுஷுக்கு மீண்டும் துள்ளும் இளமை.. இட்லி கடை படத்திலிருந்து மாஸாக வெளியான ஸ்டில்..

தனுஷுக்கு மீண்டும் துள்ளும் இளமை.. இட்லி கடை படத்திலிருந்து மாஸாக வெளியான ஸ்டில்..
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் தனுஷ். இந்த படத்தை அவருடைய அண்ணாவான செல்வராகவன் இயக்கி இருந்தார். அதில் மீசை இல்லாமல் சின்னப் பையன் தோற்றத்தில் அப்பாவித்தனையும் சேட்டையும் நிறைந்த கேரக்டரில் அசத்தலாக நடித்திருப்பார்.துள்ளுவதோ இளமை பாடத்தில் இருந்து வெளியான பாடல்கள் எல்லாமே செம ஹிட் அடித்தன. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷெரின் நடித்தார். தனுஷின் தந்தையான கஸ்தூரிராஜா தான் இந்த படத்தை தயாரித்திருந்தார். அதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.இந்த படம் வெளியாகி இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தொடர்ந்து அதே பாணியில் பல படங்கள் வெளியாகின. அதிலும் திருடா திருடி படத்தில் மன்மத ராசா என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.d_i_aஇதை தொடர்ந்து ஆடுகளம், புதுப்பேட்டை, பொல்லாதவன் என தனுஷது படங்கள் ஒவ்வொன்றும் அவருடைய நடிப்பை வெளிக்காட்டி பாராட்டையும் பெற்றுக் கொடுத்தது. தற்போது ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பாடராகவும் பன்முகம் கொண்டு திகழ்ந்து வருகின்றார்.இந்த நிலையில், தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்திலிருந்து இவருடைய இளமையான லுக் அடங்கிய போட்டோ ஒன்று பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறித்த புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருவதோடு மீண்டும் துள்ளுவதோ இளமையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.இட்லி கடை படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஷாலினி பாண்டே நடித்துள்ளதோடு, ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.