இலங்கை
தலைமன்னார் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்!

தலைமன்னார் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்!
மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான ரயில் வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் ரயில் சேவை இன்று (12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (12) கொழும்பு கோட்டை மற்றும் தலைமன்னார் இடையிலான ரயில் சேவையானது பின்வரும் வகையில் அமையவுள்ளது.
இலக்கம் 5003 – கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார்
கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படல் பி.ப 16.15 – தலைமன்னாரை அடைதல் பி.ப 22.15 (2024.11.12 ஆம் திகதியிலிருந்து)
இலக்கம் 5004 – தலைமன்னாரில் இருந்து கொழும்பு கோட்டை
தலைமன்னாரில் இருந்து புறப்படல் மு.ப 04.15 – கொழும்பு கோட்டையை அடைதல் மு.ப 10.15 (2024.11.13 ஆம் திகதியிலிருந்து)