Connect with us

தொழில்நுட்பம்

நிலவில் இருந்து பூமிக்கு சாம்பிள்களை கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரோ இறங்க போவதாக தகவல்

Published

on

Loading

நிலவில் இருந்து பூமிக்கு சாம்பிள்களை கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரோ இறங்க போவதாக தகவல்

சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் மீண்டும் சாப்ட் லேண்டிங் செய்து சோதனை செய்து பார்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் நிலவில் இருந்து பூமிக்கு சாம்பிள்களை கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரோ இறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் உடன் தொடர்பு கொள்ள இஸ்ரோ தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
அக்டோபர் 6ம் தேதி வரை தொடர்பு கொள்ள இந்தியா தொடர் முயற்சி செய்யும். 

Advertisement

இப்போதே அங்கு சூரியன் உள்ளது. கடந்த வியாழக்கிழமை அங்கே சூரியன் உதித்தது. அக்டோபர் 6ம் தேதி வரைநிலவில் பகல் இருக்கும் என்பதால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சந்திரயான் 3 ஆராய்ச்சி: முன்னதாக சந்திரயான் 3 நிலவில் தீவிரமான ஆராய்ச்சிகளை செய்து வந்தது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. 

அந்த ஆராய்ச்சியின் ஒரு கட்டமாக கடைசி நாள் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் நிலவில் மீண்டும் சாப்ட் லேண்டிங் செய்து சோதனை செய்து பார்த்தது. இந்த சோதனைக்கு பின் முக்கியமான காரணம் உள்ளது
அதாவது விக்ரம் லேண்டர் இருந்த இடத்தில் இருந்து பறந்து மேலே சென்று அதன்பின் மீண்டும் வேறு இடத்தில் தரையிறங்கி உள்ளது. இஸ்ரோ கட்டளையின் பேரில், அது திரஸ்டர்களை ஆன் செய்து பறந்து உள்ளது. எதிர்பார்த்தபடி விக்ரம் சுமார் 40 செமீ மேலே பறந்து, 30 – 40 செமீ தொலைவில் நகர்ந்து பாதுகாப்பாக வேறு இடத்தில் தரையிறங்கியது.

Advertisement

 அப்போது அதில் இருந்த பாகங்கள் எல்லாம் உள்ளே சென்றுவிட்டு அதன்பின் மீண்டும் வெளியே கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நிலவில் மனிதர்களை இறக்கும் வித்தையை இந்தியா செய்ய முடியும். அங்கேயே பறந்து இங்கும் அங்கும் செல்லும் வித்தையை இஸ்ரோ கண்டுபிடித்துள்ளது. எதிர்காலத்தில் மனிதர்களை நிலவிற்கு அனுப்ப பின்னர் மீண்டும் திரஸ்டர்கள் உதவியுடன் பூமிக்கு திரும்ப இது பெரிய உதவியாக இருக்கும்.
இந்த நிலையில்தான் இதை பயன்படுத்தி நிலவில் இருந்து பூமிக்கு சாம்பிள்களை கொண்டு வரும் முயற்சியில் இஸ்ரோ இறங்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்காகவே மேற்கண்ட சோதனையை இஸ்ரோ செய்தது என்கிறார்கள். இந்த சோதனையில் வெற்றி கண்டதால் இனி நிலவிற்கு இன்னொரு மிஷன் அனுப்பி அங்கிருந்து பொருட்களை பூமிக்கு கொண்டு வர முடியும். இதனால் பூமியில் வைத்து நிலவின் சாம்பிள்களை ஆய்வு செய்ய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான திட்டம் விரைவில் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்கிறார்கள்.
விக்ரம் லேண்டரில் இருந்து சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது. 

இதன் ரீடிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது
அதன்படி நிலவில் இருக்கும் மணல் பரப்பு, உட்பரப்பில் செய்யப்பட்ட சோதனையில் அவை பெரிதாக வெப்பத்தை கடத்தவில்லை. அதேபோல் இங்கே வெப்பம் வேறு வேறாக இருக்கிறது. அதாவது ஒரே வெப்பம் இல்லை. வெப்பத்தில் பெரிய மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisement

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பகிர்ந்துள்ள ஒரு வரைபடம், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது, இது பல்வேறு ஆழங்களில் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது.

 நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.
இன்னொரு பக்கம் விக்ரம் லேண்டரின் லேசர் மூலம் இயங்கும் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப், நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மேற்பரப்பில் கந்தகம் அதாவது சல்பர் இருப்பதை கண்டுபிடித்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

அங்கே “முதற்கட்ட பகுப்பாய்வு, மூலம், சந்திர மேற்பரப்பில் அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti) ஆகியவற்றின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது . 

Advertisement

மேலும் அளவீடுகள் செய்ததில் மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன. ஹைட்ரஜன் இருப்பு குறித்து முழுமையான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது” என்று இஸ்ரோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 இந்த நிலையில்தான் சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் “இயற்கையான சம்பவம்” ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று நிலவில் விக்ரம் லேண்டரில் இருக்கும் Lunar Seismic Activity (ILSA) எனப்படும் நிலநடுக்க ஆய்வு கருவி நிலவில் நிலநடுக்கத்தை பதிவு செய்தது.

 அதே சமயம் 26ம் தேதி நிலவில் இந்த கருவி “இயற்கையான சம்பவம்” ஒன்றை பதிவு செய்துள்ளது. அதாவது இதை ஸீரோ இயற்கையான நிகழ்வு என்று மட்டுமே கூறி உள்ளது. ஆனால் இது என்ன நிகழ்வு.. நிலநடுக்கமா? வேறு எதுவுமே என்று கூறவில்லை. இதை பற்றி சந்திரயான் 3 ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது என்ன நிகழ்வு என்பது தொடர்பான விவரங்கள் மர்மாகவே இருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன