Connect with us

இலங்கை

பாதுகாப்பு செயலாளரின் பங்குபற்றுதலுடன்நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்!

Published

on

Loading

பாதுகாப்பு செயலாளரின் பங்குபற்றுதலுடன்நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்டத்தின் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமையினை கண்டறியும் நோக்கிலான உயர் மட்ட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இவ் உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு பாதுகாப்பு செயலாளராக எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த, மற்றும் கடற்றொழில் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகரம் கலந்து கொண்டு  சீரற்ற காலநிலை தொடர்பான தகவல்களை பிரதேச செயலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களுடன் கேட்டறிந்தனர்.

Advertisement

பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய  நிலைகள், தொடர்ந்தும் வெள்ளப்பெருக்கு உருவாகுவதற்கான காரணம், உடனடியான தேவைகள், டெங்கு நுளம்பின் தாக்கத்தினை அதனை சீராக்குதல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு நிவராணம், உடமை இழப்புக்கான நிதியுதவிகள், சுகாதார பணியாளர்கள், இராணுவத்தினர், முப்படையினரின் பங்களிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கல் பற்றி விரிவாக ஆராயப்பட்டன.

இவ் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன், யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா, பிரதேச செயலர்கள் உள்ளிட்டவர்கள் பலரும் கலந்துகொண்டனர். (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன