இந்தியா
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த ராகுல் காந்தி
பிரதமர் நரேந்திர மோடி அரசியலமைப்புச் சட்டத்தை படிக்காததால் அவருக்கு அது வெறுமையாகத் தெரிவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி வெறுமனே அரசியலப்புப் புத்தகத்தைக் காட்டி அரசியல் செய்வதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நந்தூர்பார் பகுதியில் தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.