Connect with us

இலங்கை

வடக்கு – கிழக்கு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!

Published

on

Loading

வடக்கு – கிழக்கு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த தெரிவித்தார். யாழில் நேற்று  ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ் மாவட்டத்தில் இரண்டாயிரத்து700 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட வேண்டி உள்ளது. விடுவிக்கபடுமா? என  ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்; காணி விடுவிப்பு தொடர்பில் நாம்  சிந்தித்து வருகின்றோம். எதிர்காலத்தில் நாங்கள் சரியான மதிப்பீட்டை செய்வோம் . அது குறித்து முடிவு செய்வோம். எனவும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஐந்து அல்லது ஆறு வருடங்களே அதன் கால எல்லையாக உள்ளது குறித்த காலத்தில் மக்களின் நிலங்கள் முழுமையாக விடுவிக்கபடுமா? என கேட்கப்பட்ட மற்றுமொரு கேள்விக்கு, ஆம் அதனை தான் நான் கூறுகின்றேன். நாங்கள் மீண்டும் காணி விடுவிப்பு தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளோம். பாதுகாப்பு மற்றும் ஏனைய காரணங்களின் அடிப்படையில் நாம் சில முடிவுகளை எடுத்துள்ளோம் . நிச்சயமாக நேர்மறையாக இந்த விடயத்தில் ஈடுபடுவோம். ஏற்கனவே சில வீதிகளை நாம் விடுவித்துள்ளோம். அத்துடன் இந்த நாட்டு மக்களின் நலன் குறித்து நாம் எப்பொழுதும் கரிசனையுடையவர்களாகவே உள்ளோம் என்றார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன