இலங்கை
வயல்வெளியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்! விசாரணை தீவிரம்

வயல்வெளியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர்! விசாரணை தீவிரம்
குருணாகல், ஹெட்டிபொல – வெடியேகெதர பகுதியில் வயல்வெளியில் நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் ஹல்மில்லவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணம் நிகழ்ந்த விதம் தொடர்பில் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
சடலம் நீதவான் விசாரணைகளுக்கு பின்னர் பிரேத பரிசோதனைகளுக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.