இலங்கை
வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

வவுனியாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலவாக்கலையை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் மீதான விசாரணைகளை தடவியல் பொலிஸார் மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதிக்கு வந்த பதில் நீதிவான் தி.திருவருள் சடலத்தினை பார்வையிட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)