இலங்கை
வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஏ-9 பிரதான வீதி

வெள்ளத்தில் மூழ்கியுள்ள ஏ-9 பிரதான வீதி
ஓமந்தையில் பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஏ9 வீதியில் பயணிப்பவர்கள் கெபித்திகொல்லாவ, வெலிஓயா, முல்லைத்தீவு, பரந்தன் ஊடாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் மதவாச்சி, செட்டிக்குளம் மற்றும் மன்னார் ஊடான வீதிகளை சாரதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை வவுனியா ஏ9 வீதியில் சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து தற்போது தடைப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செல்லும் ஏ9 பிரதான வீதியின் ஓமந்தை பகுதியில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறிப்பாக வவுனியா நொச்சிமோட்டைஇ மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ள நீர் வழிந்தோடுவதனால் கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிற்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது. எனவே குறித்த வீதியைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.