Connect with us

இலங்கை

ஆலயம் அருகே கசிப்பு விற்பனை!

Published

on

Loading

ஆலயம் அருகே கசிப்பு விற்பனை!

திருக்கோணேஸ்வரம் கோவில் அருகில் கசிப்பு விற்பனை தொடர்பில்  கிழக்கு மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் அறிக்கையொன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் .  

இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

Advertisement

 திருக்கோணேஸ்வரம் அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெட்டிக்கடையொன்றில் கசிப்பு  விற்கப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார் . இவ்விடயம் சைவமக்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் தரும் செய்தியாகும்.

சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுமாறு  தொடர்ந்து வேண்டுதல் விடுத்த போதும் இதுவரை எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தங்களிடமும் இவ்விடம் தொடர்பாக முறையிட்ட போதும் இதுவரை பயன்கிட்டவில்லை.

புனிதமான வரலாற்றுத் தலமருகே இவ்வாறான சம்பவம் நடைபெறுவது அருவருக்கத்தக்க செயலாகும். தாங்கள் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உடன் பெட்டிக் கடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றுள்ளது.  (ஞ)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன