Connect with us

தொழில்நுட்பம்

இந்த ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அரசாங்கம் புதிய எச்சரிக்கை: எப்படி பாதுகாப்பாக இருப்பது…?

Published

on

இந்த ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அரசாங்கம் புதிய எச்சரிக்கை: எப்படி பாதுகாப்பாக இருப்பது...?

Loading

இந்த ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு அரசாங்கம் புதிய எச்சரிக்கை: எப்படி பாதுகாப்பாக இருப்பது…?

Advertisement

CERT-In இன் அறிக்கையின் படி (CIVN-2024-0349) இந்த குறைபாடுகளை அதிக ஆபத்துள்ள பிரிவில் வைத்துள்ளது. இது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் யூசர்களின் முக்கியமான தகவல்களை மூன்றாம் நபர் அக்சஸ் செய்யவும் அல்லது மோசடிக்காரர்கள் அல்லது ஹேக்கர்கள் அக்சஸ் செய்வதற்கும் வழிவகுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், பாதிக்கப்பட்ட ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் எக்சிகியூடிவ் அர்பிட்ரரி கோட்-ஐ இயக்கவும் இது அனுமதிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை தனிப்பட்ட யூசர்களுக்கு மட்டுமல்ல, ஆண்ட்ராய்டு டிவைஸ்களைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களுக்கும் கவலையளிக்கும் விஷயமாகும். எந்த ஆண்ட்ராய்டு வெர்ஷன் டிவைஸ்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

CERT-Inஇன் படி, இந்த 5 ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் அச்சுறுத்தலில் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளன. முழுமையான பட்டியல் இதோ….

Advertisement

ஆண்ட்ராய்டு வெர்ஷன் 12
ஆண்ட்ராய்டு வெர்ஷன் 12L
ஆண்ட்ராய்டு வெர்ஷன் 13
ஆண்ட்ராய்டு வெர்ஷன் 14
ஆண்ட்ராய்டு வெர்ஷன் 15

CERT-In ஆலோசனையின் படி, ஆண்ட்ராய்டு யூசர்கள் தங்கள் கைபேசிகளை மொபைல் உற்பத்தியாளரால் வழங்கப்பட்ட அப்டேட்களை அப்டேட் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறது. இதை செய்வதன் மூலம் உங்கள் டிவைஸை எந்தவிதமான ஹேக்கிங்கிலிருந்தும் பாதுகாக்கலாம். இந்த குறைபாடுகள் காரணமாக பல சிக்கல்கள் எழக்கூடும் என்று கூறப்படுகிறது.

Advertisement

ஃபிரேம்வொர்க் , சிஸ்டம், கர்னல், ஆர்ம் காம்போனென்ட்ஸ், இமேஜினேஷன் டெக்னாலஜீஸ், மீடியாடெக் காம்போனென்ட்ஸ், குவால்காம் காம்போனென்ட்ஸ் போன்ற பல்வேறு காம்போனென்ட்ஸ்களில் உள்ள சிக்கல்களால் பாதிப்புகள் உருவாகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பலவீனத்தை ஹேக்கர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால், அவர்கள் எளிதாக டேட்டாவை திருடலாம். இது நிகழும்போது, ​​​​ஃபோன் அடிக்கடி செயலிழக்கும் மற்றும் சரியாக வேலை செய்யாது.

இந்த தாக்குதல்களைத் தவிர்க்க, யூசர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸின் OS-ஐ எப்போதும் அப்டேட் செய்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இது போன்ற இணைய தாக்குதல்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கூகுள் ப்ளே ஸ்டாரிலிருந்து ஆப்களை அடிக்கடி டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் CERT-In தெரிவித்துள்ளது. குவால்காம் மற்றும் பிற நிறுவனங்கள் ஏற்கனவே பாதுகாப்பு அப்டேட்களை வழங்கியுள்ளன, மேலும் மற்ற நிறுவனங்களும் அடுத்த சில வாரங்களில் புது அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன