சினிமா
கடவுளே..அஜித்தே..!! விடாமுயற்சி டீசரை கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்..!!

கடவுளே..அஜித்தே..!! விடாமுயற்சி டீசரை கொண்டாடித் தீர்த்த ரசிகர்கள்..!!
விடாமுயற்சி டீசரை கொண்டாடிய ரசிகர்கள்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தின் டீசர் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு பிறகு வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். யூடியூபில் பல மில்லியன் வீயூஸ் விடாமுயற்சி டீசர் பெற்றுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் ராம் முத்துராம் திரையரங்கில் விடாமுயற்சி டீசர் திரையிடப்பட்டது. இதற்காக ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. ஆறு மணிக்கு ரசிகர்கள் திரையரங்கம் முன்பு வரத் தொடங்கி விட்டனர்.
தொடர்ந்து டிக்கெட் வாங்கிய அவர்கள் வரிசையில் நின்று கடவுளே அஜித்தே என்ற கோஷத்துடன் ஸ்கிரீன் பகுதிக்குள் சென்றனர். கிட்டத்தட்ட அரை மணி நேரம் அஜித்தின் பாடல்கள் விடா முயற்சி டீசர் உள்ளிட்டவைதிரையிடப்பட்டது. அப்போது ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என மகிழ்ந்தனர். தொடர்ந்து வெளியே வந்த ரசிகர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர். பின்னர் திரையரங்கம் முன்பு பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.
விடாமுயற்சி டீசர் குறித்து நம்மிடம் ரசிகர்கள் பேசினர். அப்போது, ” இந்த டீசரில் தொடக்கத்தில் அர்ஜுனின் கேங், கார் ஒன்றின் டிக்கியில் இருந்து ஒரு மனிதரை வெளியே இழுத்து போடுகின்றனர். அஜித்தொடங்கி திரிஷா என கதாபாத்திரங்கள் தொடர்பான காட்சிகள் வருகின்றன. ரசிகர்களுக்கு விருந்தளிக்க கூடிய கார் ரேசிங் காட்சி டீசரில் உள்ளது. ஹாலிவுட் திரில்லர் பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெறும் காட்சிகளின் தொகுப்பாகவே படத்தின் டீசர் உள்ளது.எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது. அஜித் வழக்கம்போல ஹேர் ஸ்டைல் லுக்கில் இருக்கிறார். அனிருத்தின் பின்னணி இசை ஆட்டம் போட வைக்கிறது. ஓம் பிரகாஷின் கேமரா அற்புதமான காட்சிகளை கண்முன்னே நிறுத்துகிறது” என தெரிவித்தனர்.