இலங்கை
கண்டியில் போலி இலக்கத்தகட்டுடன் ஜீப் வாகனம் மீட்பு!

கண்டியில் போலி இலக்கத்தகட்டுடன் ஜீப் வாகனம் மீட்பு!
கண்டி – கால்தென்ன விகாரை வளாகத்தில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இருந்து போலி இலக்கத்தகடுடன் கூடிய மொன்டெரோ ரக ஜீப் வாகனம் ஒன்று தெல்தெனிய பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்ட ஜீப் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த இலக்க தகடு மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்
மேலதிக விசாரணைகளுக்காக அந்த இலக்கத்தகடு அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
குறித்த ஜீப் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடு குளியாபிட்டிய பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமானது எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.[ ஒ ]