இலங்கை
காத்தான்குடியில் ஆபத்தான நிலையில் காணப்படும் வாவிக்கரை பூங்கா!

காத்தான்குடியில் ஆபத்தான நிலையில் காணப்படும் வாவிக்கரை பூங்கா!
காத்தான்குடி வாவிக்கரை பிரதேசத்தில் அமையப்பெற்றிருக்கும் வாவிக்கரை பூங்கா முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் பூங்கா நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூண்களில் சரிவு ஏற்பட்டு வாவியினுள் உடைந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
பூங்காவில் நடப்பதற்கு பொறுத்தப்பட்டுள்ள மரப் பலகைகளும் பல இடங்களில் உடைந்து பாரிய துளைகளாகவும் காட்சியளிக்கிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் இளைப்பாருவதற்காக குறித்த பூங்காவிற்கு வருகை தருவதோடு வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் இதனை பார்வையிடுவதற்காக வருவதுண்டு.
இவ் வாவிக்கரை பூங்கா முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினாலேயே தற்போது இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதுடன் அவ்வப்போது சிலர் கால் தவறி விழுந்துள்ளதாகவும் பாரிய ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கின்றர்.
அத்துடன் குறித்த பூக்காவில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழ்களும் சேதமடைந்துள்ளதுடன் இரவு நேரங்களில் இருளான சூழலை சமூக விரோதச் செயல்களை மேற்கொள்பவர்கள் சாதகமாக பயன்படுத்தும் நிலையும் இங்கு காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கவனத்திற் கொண்டு பொருத்தமான பாதுகாப்பு வசதிகளை செய்து புணர்நிர்மானம் செய்து பாராமரித்துத்தர முன்வர வேண்டும் என்று பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.