சினிமா
கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய கேட்க சென்ற பிரபல நடிகரின் பெற்றோர்கள்

கீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய கேட்க சென்ற பிரபல நடிகரின் பெற்றோர்கள்
கீர்த்தி சுரேஷ் இன்று இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. பேபி ஜான் என்ற படத்தின் மூலம் வட இந்தியாவிலும் இவர் கால் பதித்து விட்டார்.இந்நிலையில் கீர்த்தி தன் 15 வருட காதலரை விரைவில் கோவாவில் திருமணம் செய்யவுள்ளதாக அவரே கூறி விட்டார்.இந்நிலையில் பிரபல நடிகர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அவர்கள் ஒரு பேட்டியில், சண்டக்கோழி 2 நடிக்கும் போது விஷாலின் பெற்றோர்கள் இப்படி ஒரு பெண் நம் வீட்டிற்கு வரவேண்டும் என நினைத்தார்களாம்.அதனால் கீர்த்தி சுரேஷ் பெற்றோரிடம் விஷால் பெற்றோர் பேச முடிவெடுக்கும் சமயத்தில் இந்த விஷயம் தெரிந்து கீர்த்தியே, நான் ஒருவரை நீண்ட வருடமாக காதலிக்கிறேன் என கூறி அந்த சம்மந்தத்தை மறுத்ததாக அவர் கூறியுள்ளார்.