Connect with us

சினிமா

சென்னை OMR-ல் ஆடம்பர குடியிருப்பு..! புஷ்பா 2 இனால் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா..

Published

on

Loading

சென்னை OMR-ல் ஆடம்பர குடியிருப்பு..! புஷ்பா 2 இனால் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா..

கடந்த சில ஆண்டுகளில் புஷ்பா, வரிசு போன்ற பான்-இந்தியா வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தனது கேரியரை உறுதிப்படுத்திய ராஷ்மிகா, தற்போது தமிழ் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றார்.தற்போது வெளியாகவுள்ள புஷ்பா பாகம் 2 இல் நடித்துள்ள இவர் அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றார்.இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் தனக்கென்ற ரசிகர்களை கொண்டிருக்கும் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தானா, சென்னையில் புதிய அடையாளம் அமைக்கத் திட்டமிட்டுள்ளார். தகவல்கள் படி, சென்னையின் பிரபலமான OMR பகுதியில் உலகத்தர வசதிகளுடன் கூடிய ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்குவதற்கு அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நகரில் நீண்ட காலத்திற்கு குடியேற அவர் திட்டமிட்டிருப்பதாகவும், இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்த விரும்புகிறாரோ என்ற கேள்விகளும் ரசிகர்களிடையே எழுந்துள்ளன.இந்த புதிய குடியிருப்பு, சுமார் பல கோடிகள் மதிப்பில் உள்ளதாகவும், அதில் பிரமாண்ட உடற்பயிற்சி கூடம், தனியார் குளம் போன்ற வசதிகள் அடங்கியதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன