இந்தியா
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி : சபாநாயகர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி : சபாநாயகர் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 9 மற்றும் 10 தேதிகளில் இரண்டு நாட்கள் மட்டும் நடத்தப்பட உள்ளதாக சபாநாயகர் அப்பாவு இன்று (டிசம்பர் 2) தெரிவித்துள்ளார்.
தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “அலுவல் ஆய்வு கூட்டத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசித்தோம். அதன்படி வரும் 9, 10 ஆகிய இரண்டு நாட்களில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் நாளில் கூடுதல் செலவினங்களுக்காக மானிய கோரிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்கள். அன்றைய தினமே மதுரையில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார்.
பேரவையின் இரண்டாம் நாளன்று பல விவாதங்கள் நடைபெற்று பல மசோதாக்கள் நிறைவேற்றப்படும்” என அப்பாவு தெரிவித்துள்ளார்.