இந்தியா
நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு

நிர்மலா சீதாராமனை சந்தித்த தங்கம் தென்னரசு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (டிசம்பர் 2) சந்தித்து பேசினார்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லி சென்றுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நிதி அமைச்சர் அலுவலகத்தில் நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது வணிக வரித்துறை முதன்மை செயலாளர் பிஜேந்திர நவநீத், நிதித்துறை இணை செயலாளர் பிரதீக் தயாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்சினை, ஜி.எஸ்.டி., வரி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.