இலங்கை
பிள்ளையானிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம்

பிள்ளையானிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம்
பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தன்னால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்றைய தினம் வர முடியாது எனவும், அதற்கு மாறாக எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒரு திகதியை ஒதுக்கினால் தன்னால் வர முடியும் எனவும் பிள்ளையான் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.