இலங்கை
மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு வியஜம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர்!

மட்டக்களப்பபு மாவட்ட செயலகத்திற்கு வியஜம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர்!
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர பயணம் மேற்கொண்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக ஆளுநர் தெளிவுபடுத்தினார்.
இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர் இன,மத பேதமின்றி நாம் இலங்கையர் எனும் அடிப்படையில் உழல் அற்ற தூய்மையான சேவையை மக்களுக்கு வழங் வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மாவட்ட மேலதிக மாவட்ட செயலர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் , உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.