இலங்கை
மழை நீரால் அவதியுறும் பாடசாலை மாணவர்கள்

மழை நீரால் அவதியுறும் பாடசாலை மாணவர்கள்
எட்டியாந்தோட்ட பாரதி தமிழ் வித்தியாலய மாணவ மாணவிகள் கோரிக்கை!
ஆரம்ப காலம் தொட்டு அது என்னவோ தெரியல, மழை நீருக்கு எங்கள் பாடசாலை மீது அவ்வளவு பிரியம். வகுப்பறைக்குள் வந்து எங்களுடன் அந்நியோன்யம் ஆகிவிடும்.
காலை 7 மணிக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் வந்து விடுவார்கள். முதல் நாள் இரவு மழை என்றால் இன்னும் சீக்கிரமாக பாடசாலைக்கு வந்து விடுவார்கள். வகுப்பறைக்குள் இருக்கும் மழை நீரை வெளியேற்றும் அந்த மஹா யுத்தம் சூரிய உதயதோடு, இனிதே ஆரம்பித்து விடும்.
எத்தனையோ,புதிய புதிய அறிவியல் கண்டு பிடிப்புகள் தொடர்பாக இலங்கையில் உள்ள ஏனைய மாணவர்கள் கல்வி கற்க, நாங்கள் மட்டும் மழைநீரை வாசலுக்கு வெளியே அனுப்பி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் வகுப்பறைக்குள் செல்வோம்.
எத்தனை இன்னல்கள்,எத்தனை துயரங்கள், எத்தனை தடைகள்…என்ன வந்தாலும், பாடசாலை இன்றும் இயங்கி வருகிறது.
பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிபர் உட்பட இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் உடன் கவனம் செலுத்தி இப் பாடசாலை மாணவர்கள் நலன் கருதி இப் பாடசாலையை நவீன முறையில் கட்டி கொடுக்க முன் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். (ப)
.