இலங்கை
மானிப்பாய் வீதியில் குவியும் குப்பைகள் ; மக்கள் விசனம்!

மானிப்பாய் வீதியில் குவியும் குப்பைகள் ; மக்கள் விசனம்!
மானிப்பாய் மடத்தடி வீதியில் சில விசமிகள் தமது வீட்டுக் கழிவுகளையும் விலங்குக் கழிவுகளையும் வீதியிலே வீசிச் செல்கின்றதால் வீதியால் பயணிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அவ்வீதிக்கு அருகே வாழும் குடும்பங்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் பிளாஸ்ரிக், தகரப் பேணிகளில் நீர் தேங்கி நிற்பதால் டெங்கு நுளம்பு பெருகி டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும், வீதியில் உள்ள மின் விளக்குகளும் ஒளிர்வதில்லை எனவும் அதனை பிரதேச சபை திருத்தம் செய்வதும் இல்லை எனவும் இது குறித்து பிரதேச சபையின் செயலர் எஸ்.சபேசனுக்கு தெரியப்படுத்திய நிலையிலும் அவர் அதற்கு இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சி இல்லாத காலத்தில் அவரது செயற்பாடுகள் விரும்பத்தக்கதாக இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)