சினிமா
ரஜினியின் அந்த புத்தி மட்டும் மாறவே மாறாது! சூப்பர் ஸ்டாரை பத்தி செய்யாறு பாலு பகிர்

ரஜினியின் அந்த புத்தி மட்டும் மாறவே மாறாது! சூப்பர் ஸ்டாரை பத்தி செய்யாறு பாலு பகிர்
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக காணப்படுபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் எதிர்வரும் 12-ம் தேதி தனது 74 வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதற்காக அவருடைய ரசிகர்கள் தடபுடலாக பல ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்தான் ரஜினிகாந்த். ஆரம்பத்தில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், ஒரு கட்டத்துக்கு மேல் ஹிரோவாக உருவெடுத்தார். ரஜினி நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.அவருக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்றது. மேலும் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களும் போட்டி போட்டு ரஜினியை தமது படங்களில் நடிக்க வைத்து வந்தார்கள்.d_i_aதமிழில் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பலமொழிகளிலும் நடித்து மிகப்பெரிய இடத்தை தனக்கென உருவாக்கியுள்ளார். இதனால் இவருடைய செல்வாக்கு மக்கள் மத்தியில் பெருகியது.இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்த கருத்து ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்போது முதல் இப்போது வரை ஒரே ஒரு குணம் மட்டும் தான் மாறவில்லை. அதாவது விளம்பர படங்களில் நடிப்பது தொடர்பாக அவர் தனது புத்தியை மாற்றவே இல்லை என பாராட்டியுள்ளார். இந்த கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் இடையே வைரலாக பரவி வருகின்றது.