சினிமா
விஜய் மகனை வெயிட்டாக கவனித்த லைக்கா.. முதல் படத்திற்கே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய சஞ்சய்

விஜய் மகனை வெயிட்டாக கவனித்த லைக்கா.. முதல் படத்திற்கே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய சஞ்சய்
விஜய்யின் வாரிசு ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனர் நாற்காலியை அவர் தேர்ந்தெடுத்து விட்டார். தயாரிப்பில் இயக்கும் முதல் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.
அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜேசன் சஞ்சயின் முதல் ஹீரோ என அறிவிக்கப்பட்டது. அந்த மோஷன் போஸ்டர் வேற லெவலில் ட்ரெண்டானது.
இது விஜய் ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் சஞ்சய்க்கு எல்லா பக்கம் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதே போல் இவ்வளவு நாட்கள் அறிவிப்பு தாமதமானதற்கு காரணம் ஸ்கிரிப்ட் கரெக்சன் தான் என்ற தகவலும் கசிந்து உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க சஞ்சய்க்கு லைக்கா இப்படத்திற்காக 10 கோடி சம்பளம் கொடுத்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ஒரு புதுமுக இயக்குனருக்கு இத்தனை கோடி சம்பளத்தை யாரும் கொடுக்க மாட்டார்கள்.
இது எல்லாமே மகன் என்ற காரணத்தினால் மட்டும் தான். அதனாலேயே லைக்கா பல பிளான் போட்டு சஞ்சய்யை வெயிட்டாக கவனித்திருக்கிறது. இதன் பிறகு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள், டீசர், ட்ரைலர் என எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது.
அந்த சமயத்தில் விஜயின் புகழை பயன்படுத்தலாம் என்ற எண்ணம் லைக்காவுக்கு இருக்கலாம். அவ்வளவு ஏன் இசை வெளியீட்டு விழாவில் கூட நாம் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கலாம். அதனாலேயே லைக்கா இந்த அளவுக்கு சம்பளத்தை வாரி கொடுத்துள்ளதாக ஒரு பேச்சு கிளம்பி உள்ளது.