Connect with us

இலங்கை

6 தமிழ் அமைச்சர்களை நியமிக்க வேண்டும்!

Published

on

Loading

6 தமிழ் அமைச்சர்களை நியமிக்க வேண்டும்!

புதிதாக ஆட்சி அமைக்கும் அரசு விகிதாசார அடிப்படையில் 19 சிங்களஅமைச்சர்களும் 6 தமிழ் அமைச்சர்களும் தெரிவு செய்யப்பட வேண்டும் இவ்வாறு விகிதாசார அடிப்படையில் இந்த அமைச்சுக்களை நியமிக்காவிடின் எவ்வாறு இவர்கள் நல்லாட்சியை அமுல்படுத்துவார்கள் என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே சிறுபான்மையினருக்கும் அமைச்சுக்களை வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் இரா. துரைரெத்தினம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாவிக்கரையிலுள்ள ஈபி.ஆர்.எல்.எப் கட்சி காரியாலயத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசு மக்களின் ஆணையை பெற்று பல தசாப்தங்களுக்கு பின்னர் கூடுதலாக ஊழலுக்கு எதிராக மாற்றத்தை விரும்பியவர்கள் வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது அதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிறந்த கொள்கைகளையுள்ள நல்லாட்சி அரசு ஆட்சிய அமைக்க போகின்ற நிலையில் சிறுபான்மையினர் பாதிக்கப்படமால் இருக்க வேண்டுமாயின் விகிதாசார அடிப்படையில் அமைச்சுக்களை நியமிக்கப்படவேண்டும். அது தவறும் பட்சத்தில் அவர்கள் எவ்வாறு நல்லாட்சியை அமுல்படுத்துவார்கள் என்ற சந்தேகம் மக்களுக்கு மத்தியில் நிலவும் எனவே நல்ல கொள்கைகளை முன்வைக்கின்ற அடிப்படையில் இந்த புதிய அரசு 25 அமைச்சரவையில் இன விகிதாரத்தின் அடிப்படையில் 19 சிங்கள அமைச்சர்களும் 6 தமிழ் அமைச்சர்களும் தெரிவு செய்யப்படவேண்டும்.  

Advertisement

நாட்டில் 9 சதவீதமாக உள்ள விசேட தேவையுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தசாப்தங்களுக்கு பிறகு இந்த அரசு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டதை கரம்கூப்பி வாழ்த்துகின்றேன் என தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன