இந்தியா
Kilangan Meen Benefits: உங்க குழந்தைகள் Genius-ஆக வலம் வரணுமா..? அப்ப இந்த மீனை அடிக்கடி கொடுங்க…

Kilangan Meen Benefits: உங்க குழந்தைகள் Genius-ஆக வலம் வரணுமா..? அப்ப இந்த மீனை அடிக்கடி கொடுங்க…
கிழங்கான் மீனின் நன்மைகள்
புற்றுநோய் செல்கள் அழித்து, இதயத்தினை பாதுகாத்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், உடல் சருமத்தினை மேம்படுத்தும், சுவையான கிழங்கான் மீனின் மருத்துவ குணங்கள் மற்றும் சிறப்புகளை பற்றி அறியலாம்.
உடல் பழுப்பு வெள்ளை நிறத்தில், தலையில் சிவப்பு நிறத்தில், கைவிரல் அளவிற்கு இருப்பது கிழங்கான் மீன். கருப்பு நிறத்தில் இருப்பது கருப்பு கிழங்கான் மீன், வெள்ளை நிறத்தில் இருப்பது வெள்ளை கிழங்கான் மீன் ஆகும். பார்ப்பதற்கு நெத்திலி மீன் போன்று சற்று பெரியதாக இருக்கும். சிறிய வகை மீன்களில் சுவைமிக்க மீன்களில் இதுவும் ஒன்று. குறைந்த விலையில் மிகுந்த சுவையும், பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்த மீனாக உள்ளதால் கிலோ ரூ.200 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
புரோட்டின் சத்து அதிகமாக இருக்கும் மீன்களில் இதுவும் ஒன்று. இதனால் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட கொடுப்பதால் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுத்து சருமம் பொலிவு பெறும். வெயில் காலங்களில் ஏற்படும் சரும பிரச்சினைகளை தடுக்க அதிகமாக வாங்கி சாப்பிடலாம். பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சத்துக்களும் உள்ளது. இதனால் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. குளிர்ச்சி தன்மை அதிகம் உள்ளதால் உடல் சூட்டை தடுத்து இதனால் ஏற்படும் உடல் உபாதைகள் மற்றும் மூலம் போன்ற நோய்கள் வருவதை தடுக்கிறது.
புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுத்து, புற்றுநோயை பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. வாத நோய் கற்கள் உருவாகுவதையும் தடுக்கிறது. மாரடைப்பு போன்ற இதய நோய் வராமலும் தடுக்கிறது. இந்த மீனில் குழம்பு, கிரேவி, பொரித்து, சொதி வைத்து சாப்பிடலாம். அனைத்திற்கும் சுவையாக இருக்கும் என பாம்பன் மீனவர்கள் தெரிவித்தனர்.