இலங்கை
அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை அறிக்கை ஆய்வு

அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை அறிக்கை ஆய்வு
அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் கே. டி. சித்ரசிறி குழு அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (03) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி அமைச்சர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் ஆராய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி.சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமித்தார். அவர்களின் அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.
“அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில சலுகைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இவை அனைத்தையும் நாங்கள் ஒன்றாகப் பரிசீலிப்போம் எனவும் அவர் கூறினார்.