Connect with us

இந்தியா

“ஐந்து முறை முன்னறிவிப்பு கொடுத்து நீரை திறந்தோம்.. உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது” – சாத்தனூர் அணை விவகாரத்தில் சேகர் பாபு விளக்கம்

Published

on

“ஐந்து முறை முன்னறிவிப்பு கொடுத்து நீரை திறந்தோம்.. உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது” - சாத்தனூர் அணை விவகாரத்தில் சேகர் பாபு விளக்கம்

Loading

“ஐந்து முறை முன்னறிவிப்பு கொடுத்து நீரை திறந்தோம்.. உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது” – சாத்தனூர் அணை விவகாரத்தில் சேகர் பாபு விளக்கம்

வங்கக் கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அதி கன மழை பொழிந்தது. இதில் குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தைச் சந்தித்தன. பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டு சாலைகளும் துண்டிக்கப்பட்டது.

Advertisement

மேலும், சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் இருந்து எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி நள்ளிரவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது” என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, “பெரும்பழை பாதிப்பில் இருந்து, இயந்திரமாக முதலமைச்சர் தமிழகத்தை காக்கும் கடவுளாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட பெருமழை வெள்ளத்தின் போது ஆளும் கட்சிக்கு உதவியாக இல்லாவிட்டாலும், வஞ்சக சூழ்ச்சியோடு அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

Advertisement

எதிர் கட்சி தலைவர் கள ஆய்வு கூட்டங்களைகூட கூட்ட முடியாமல் கட்சி திணறி வரும் நிலையில், சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் தான் முன்னறிவிப்பு இல்லாமல் திறக்கப்பட்டதால் தான், பெரிய சேதம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த காலங்களை அவர் திரும்பி பார்க்க வேண்டும், 2015ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்ததால், 280க்கு மேற்பட்ட உயிர்கள் பறிபோனதும், பல லட்சம் வீடுகள் இழந்ததும் மறந்திருக்க முடியாது.

Advertisement

சாத்தனூர் அணையை பொறுத்தவரை முதல்வரின் உத்தரவின்படி, கடந்த 25ம் தேதியில் இருந்து படிப்படியாக நிரம்பு நீர் முன்னறிவிப்பு வெளியிட்டு வெளியேற்றப்பட்டது. முதற்கட்டமாக கடந்த 25ம் தேதி 10,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதுபோல், முன்னறிவிப்பு வெளியிட்டு ஐந்து முறை சாத்தனூர் அணையில் இருந்து படிப்படியாக நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று இறுதியாக முன்னறிவிப்பு வெளியிட்டு 1,68,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அப்படி முன்னறிவிப்போடு வெளியேற்றப்பட்டதால்தான் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன