இலங்கை
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் அதிரடி கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் அதிரடி கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் அழகுசாதன பொருட்களை கடத்த முயன்றதாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து அவரின் பயண பொதிகளை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது 5 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும், சந்தேக நபர் வர்த்தக நோக்கத்தின் அடிப்படையில் அடிக்கடி இந்தியா சென்று வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.