இலங்கை
கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் சிக்கிய நபர்!

கம்பஹாவில் சட்டவிரோத மதுபானத்துடன் சிக்கிய நபர்!
கம்பஹா – உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.
பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 67 லீற்றர் (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.