Connect with us

சினிமா

குண்டயை தூக்கிப்போட்ட மகிழ்திருமேனி.. விடாமுயற்சிக்கு செக் வைத்த நிறுவனம்

Published

on

Loading

குண்டயை தூக்கிப்போட்ட மகிழ்திருமேனி.. விடாமுயற்சிக்கு செக் வைத்த நிறுவனம்

படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. மற்றும் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் எப்போது வெளியாகும் என வருட கணக்கில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த சூழலில் விடாமுயற்சி டீசர் ரசிகர்களுக்கு நிம்மதி பெருமூச்சு விட காரணமாக அமைந்தது. ஆனாலும் இப்படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் காப்பியாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்திற்கு இன்னும் பிரச்சனை ஏற்படும்படி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

Advertisement

பொதுவாகவே படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ஓடிடி நிறுவனங்கள் பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்கி விடுகின்றனர். படம் வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியிடுகின்றனர். அந்த வகையில் விடாமுயற்சி படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்து விட வேண்டும் என நெட்பிளிக்ஸ் கூறி இருக்கிறது.

ஆனால் மகிழ்திருமேனி இன்னும் 25 நாள் ஷூட்டிங் தேவைப்படுவதாக கூறியிருக்கிறார். இதைக் கேட்டு மொத்த விடாமுயற்சி யூனிட்டும் ஆடிப் போய்விட்டதாம். அதன் பிறகு அஜித் அதிகபட்சமாக 10 நாட்களும் குறைந்தது ஆறு நாட்களுக்குள் ஷூட்டிங் நடத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதனால் படக்குழு இப்போது ஷூட்டிங் நடத்துவதற்காக தாய்லாந்து சென்று லொகேஷன் பார்த்து வந்துள்ளனர். விரைவில் சென்று ஷூட்டிங் நடத்த இருக்கின்றனர். அதன் பிறகு பின்னணி வேலைகளும் சீக்கிரமாக செய்ய உள்ளனர்.

Advertisement

ஆகையால் இந்த முறை எப்படியும் பொங்களுக்கு விடாமுயற்சி வெளியாகும் என்பதில் சந்தேகம் இல்லை. நெட்பிக்ஸின் கிடுக்குப்பிடியால் மகிழ்திருமேனி இடமிருந்த தயாரிப்பாளரின் தலை தப்பியுள்ளது. மேலும் அடுத்த வருடம் தல பொங்கலாக தான் இருக்கப் போகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன